முன்னாள் சிறப்பு டிஜிபி தொடர்பான விவகாரம் - பெண் ஐபிஎஸ் அதிகாரி கணவருடன் ஆஜர்
பதிவு : நவம்பர் 12, 2021, 08:12 PM
முன்னாள் டிஜிபி மீதான பாலியல் புகார் குறித்த வழக்கில் பெண் ஐபிஎஸ் அதிகாரி தன் கணவருடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
முன்னாள் டிஜிபி மீதான பாலியல் புகார் குறித்த வழக்கில் பெண் ஐபிஎஸ் அதிகாரி தன் கணவருடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் அத்துமீறியதாக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பான வழக்கும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே சாட்சியம் அளிப்பதற்காக பெண் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது கணவர் என 2 பேரும் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி 4 மணி நேரம் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்காக பெண் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரின் கணவரும் நேரில் ஆஜராகினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.