"விவசாயிகளை நேரில் சந்திக்க முடிவு" - முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : நவம்பர் 12, 2021, 07:04 PM
டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்யவுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின்  நாளை ஆய்வு செய்யவுள்ளார்.

தொடர் கனமழை காரணமாக நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. பயிர் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை தயார் செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பணியை துவக்கியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின்  நாளை டெல்டா மாவட்டங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து புறப்படும் ஸ்டாலின், வழியில் கடலூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.