ரிசர்வ் வங்கியின் 2 வாடிக்கையாளர் சேவை திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர்
பதிவு : நவம்பர் 12, 2021, 04:13 PM
ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

ஆர்.பி.ஐ. சில்லறை நேரடி திட்டம் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறை தீர்ப்பு திட்டம் ஆகிய 2 திட்டங்களை மோடி துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், "சில்லறை நேரடித் திட்டம்",  நாட்டில் உள்ள சிறு முதலீட்டாளர்களுக்கு அரசுப் பத்திரங்களில் எளிய மற்றும் பாதுகாப்பான முதலீட்டுக்கான ஊக்கத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

மேலும்,  வங்கித் துறையில் "ஒரே நாடு, ஒரே குறைதீர்ப்பாளர்" என்ற புதியதோர் வடிவத்தை ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்தின் மூலம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இன்று தொடங்கப்பட்ட இரண்டு திட்டங்களும் நாட்டில் முதலீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதோடு,

முதலீட்டாளர்கள் மூலதனச் சந்தைகளை அணுகுவதை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் என்று குறிப்பிட்டார்.

வங்கித் துறையை வலுப்படுத்தும் நோக்கிலே கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் 19 மடங்கு வளர்ந்துள்ளதாகவும், 

வங்கிகள் மற்றும் மக்கள் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் மோடி பெருமிதம் கொண்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.