ராஜராஜ சோழன் சதய விழா; பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை - தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
பதிவு : நவம்பர் 12, 2021, 03:49 PM
மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா நடைபெறுவதை யொட்டி நாளை பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா நடைபெறுவதை யொட்டி நாளை பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழரின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும்  தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்து அன்று  இரண்டு நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனோ அச்சம் காரணமாக ஆயிரத்து 36-ம் ஆண்டு சதய விழா நாளை ஒரு நாள் மட்டுமே  நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.