"தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை; தேவையான உரங்கள் கிடைக்க வழிவகை" - அமைச்சர் ஐ.பெரியசாமி
பதிவு : நவம்பர் 12, 2021, 03:32 PM
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தது.

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழுவிற்கு முதல்வர் உத்தரவிட்டார். அக்குழுவில் தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், மெய்யநாதன், ரகுபதி, அன்பில் மகேஷ், சக்கரபாணி ஆகிய அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அதன் படி, மதுக்கூர் அருகே அண்டமி கிராமத்தில் அமைச்சர்கள் குழுவினர் 7 பேர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஐ.பெரியசாமி, மதுக்கூர் வட்டாரத்தில் 3 ஆயிரத்து 700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவித்தார். சேத விவரங்கள் முதல்வரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்த அவர், தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், கோமாரி நோய் பரவாமல் கால் நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், விவசாயப் பணிகளுக்கு யூரியா உள்ளிட்ட எல்லா வகை உரங்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.