பள்ளி ஆசிரியர் அத்துமீறியதால் விரக்தி - 12ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை
பதிவு : நவம்பர் 12, 2021, 02:53 PM
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் அத்துமீறியதால் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் அத்துமீறியதால் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை கோட்டை மேடு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்த மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி நட்பாக பழகி பின்னர் அவரிடம் அத்துமீறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழை வாங்கி உள்ளார். வேறு பள்ளியில் சேருவதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் திடீரென தன் நண்பருக்கு போன் செய்துள்ளார் அந்த மாணவி. அப்போது தனக்கு மன உளைச்சலாக இருப்பதாக கூறியிருக்கிறார் அவர். உடனடியாக அந்த நண்பர் மாணவியின் வீட்டிற்கு சென்ற போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ந்து போன அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஆசிரியரின் அத்துமீறல் குறித்து பலமுறை பள்ளியில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததே மகளின் மரணத்திற்கு காரணம் என சிறுமியின் தாய் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

366 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 views

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

8 views

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

17 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

11 views

அணைக்கரை கொள்ளிடம் ஆறு - கனமழையால் நிரம்பி காணப்படும் தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

15 views

சேதமடைந்த ஏரியின் முகப்பு பகுதி - கரையை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஏரியில் கரையை உடைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.