சென்னையில் குறைய தொடங்கிய மழை - பிரதான ஏரிகளின் நீர்வரத்து குறைவு
பதிவு : நவம்பர் 12, 2021, 09:57 AM
கனமழை குறைய தொடங்கியதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.
கனமழை குறைய தொடங்கியதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகிதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரி அடுத்த சோழவரத்தில் அதிகபட்சமாக 102 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த மழையின் தாக்கம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று புழல் ஏரிக்கு பத்தாயிரத்து 690 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று இரண்டாயிரத்து 662 கனஅடியாக சரிந்துள்ளது. புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக மூவாயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று ஆறாயிரத்து 737 கன அடியாக இருந்த சோழவரம் ஏரியின் நீர்வரத்து இன்று இரண்டாயிரத்து 237 கனஅடியாக சரிந்துள்ளது. அதேநேரம் சோழவரம் ஏரியில் இருந்து இரண்டாயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை ஏரியின் நீர்வரத்து 215 கனஅடியாக இருந்த நிலையில் தற்பொழுது 321 கனஅடியாக அதிகரித்துள்ளது. மழை குறைந்ததால் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் நிறுத்தப்படும் என்றும், மீண்டும் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

78 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

பிற செய்திகள்

"தர்மபுரி மாவட்டம் பலமடைந்துள்ளது" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

7 views

தொடர் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

7 views

"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

795 views

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

12 views

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று

13 views

அடகு கடையில் கை வைத்த கொள்ளையர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நகை மற்றும் அடகு கடையில் இருந்து சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.