டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
பதிவு : நவம்பர் 12, 2021, 02:44 AM
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
துபாயில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து, பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் பாபர் அசாமும், ரிஸ்வானும் பொறுப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ரிஸ்வான் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 67 ரன்களுக்கு ரிஸ்வான், ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சமான், அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இதனால், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் 176 ரன்கள் சேர்த்தது.பின்னர் 177 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் அமைந்தது. அந்த அணியின் கேப்டன் ஃபின்ச், ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். எனினும் அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் வார்னர், 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மார்ஷ் 28 ரன்களுக்கும், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் ஒற்றை இலக்கங்களிலும் நடையைக் கட்டினர். இதனால், பாகிஸ்தான் முன்னிலை பெற்ற நிலையில், ஸ்டாய்னிஸ்-மேத்யூ வேட் (mathew wade) ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாகீன் அப்ரிடி வீசிய 19-வது ஓவரில், ஹாட்ரிக் சிக்சர் அடித்து வேட்(wade)ஆட்டத்தை முடித்து வைத்தார். வேட் 41 ரன்களும், ஸ்டாய்னிஸ் 40 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம், இறுதிப் போட்டிக்குள் முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா, வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோத உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

682 views

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

608 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

182 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

89 views

பிற செய்திகள்

இன்று 2-வது டெஸ்ட்... களமிறங்கும் கோலி

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.

34 views

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

14 views

ஐபிஎல் 2022 - எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் ?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

20 views

முதன்முறையாக ரெய்னாவை கைவிட்ட சென்னை

ஐபிஎல்லில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

19 views

CSK - வின் அடுத்த கேப்டன் ஜடேஜா?

ஐபிஎல்லில் சென்னை அணியில் தோனியைவிட அதிக தொகைக்கு ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார்.

16 views

IPL; எந்த வீரர்கள், எவ்வளவு விலைக்கு தக்கவைப்பு?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

195 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.