சாப்பிடாத சமோசாவுக்கு பில் போட்டது ஏன்? - வாக்குவாதம் கொலையில் முடிந்த கொடூரம்
பதிவு : நவம்பர் 12, 2021, 02:08 AM
மதுரையில் உணவக உரிமையாளரை வெட்டிக் கொலை செய்த விறகு வெட்டும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தன் நண்பருடன் சேர்ந்து கே.புதூர் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். சம்பவத்தன்று முத்துக்குமார் ஓட்டலில் இருந்த போது திடீரென வந்த மர்ம நபர் முத்துகுமாரை கொன்றுவிட்டு அவரின் இடது கையை துண்டாக வெட்டி எடுத்து அதை அந்த பகுதியில் உள்ள தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி வளாகத்தில் வீசிச் சென்றார். கொலையாளியை போலீசார் தேடி வந்த நிலையில் விறகு வெட்டும் தொழிலாளியான கண்ணன் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவத்தன்று கண்ணன் மது போதையில் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். இட்லி சாப்பிட்ட அவருக்கு சமோசாவும் சாப்பிட்டதாக கூறி முத்துக்குமார் பில் கொடுத்ததாக தெரிகிறது. சாப்பிடாத சமோசாவுக்கு ஏன் பில் தர வேண்டும் என கேட்டு நடந்த வாக்குவாதம் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. நடந்ததை எல்லாம் கண்ணன் வாக்குமூலமாக தெரிவித்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

பிற செய்திகள்

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

9 views

வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

7 views

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 views

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

8 views

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

20 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.