வெள்ளத்தில் சிக்கிய மின்வாரிய தொழிலாளர்கள் - ஏரி வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு
பதிவு : நவம்பர் 12, 2021, 02:04 AM
திருப்போரூர் அருகே கடும் மழையிலும் பணியில் ஈடுபட்டு இருந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள தையூர் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஏரி நடுவில் இருக்கும் மின் கம்பத்தில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்குவதற்காக  ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் பைபர் படகில் சென்றனர்.  மூன்று பேர் கம்பத்தின் மேல் ஏறி நின்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது, படகில் இருந்த 3 பேர் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மரக்கிளையில் சிக்கி தவித்துக்கொண்டு இருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் ஏரி நடுவில் உள்ள மின்கம்பத்தில் சிக்கி இருந்த  3 பேரையும் போலீசார் கரைக்கு கொண்டு வந்தனர். மழையை பொருட்படுத்தாமல் பணியாற்றிய   மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களையும் அவர்களை மீட்ட போலீசாரையும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டினார்.

பிற செய்திகள்

கணவனை பிரிந்து வாழ்ந்த பள்ளி முதல்வர் சந்தேக மரணம்?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளியின் முதல்வரான 35 வயது பெண், விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

13 views

மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதல் கணவன்

ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

ஜெ.வின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் - போயஸ் இல்ல வழக்கின் ஆவணங்களை வைத்து தீபக் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

8 views

ஜெயலலிதா போல் உடையணிந்து பெண் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல உடையணிந்து, அவரது நினைவிடத்தில் பெண் ஒருவர் மரியாதை செலுத்தினார்.

14 views

ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

12 views

வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

கோவையில் சுரங்கப்பாதையில் சிக்கிய காரை மீட்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.