மழை வெள்ள பாதிப்பு, நிவாரண பணிகள் - முதல்வரிடம் கேட்டறிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பதிவு : நவம்பர் 11, 2021, 04:19 PM
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையினால் ஏற்பட்ட பாதிப்புகள், மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வரிடம் ஆளுநர் கேட்டறிந்தார். அத்துடன், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரல் S.N.பிரதான் அவர்களிடம், கனமழை, மீட்புப் பணிகள் குறித்து தொலைபேசியில் விசாரித்தார். அப்போது, NDRF-ன் 14 பட்டாலியன்கள் மற்றும் படைகள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணத்திற்கு ஆதரவு அளிக்கும் பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.