தண்ணீர் தேங்கிய பகுதிகளில் கழிவுகளை அகற்ற உத்தரவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பதிவு : நவம்பர் 10, 2021, 05:05 PM
சென்னை மாம்பலம் கால்வாய் உட்பட 5 இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாம்பலம் கால்வாய் உட்பட 5 இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நான்காவது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை விஜயராகவா சாலையில் உள்ள மாம்பலம் கால்வாய், தி.நகர் ஜி.என்.செட்டி சாலை, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மழைநீர் தேங்கிய இடங்களை அவர் பார்வையிட்டார். பின்னர், தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, எழிலன் உள்ளிட்டோரும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் உடனிருந்தனர்.
's : CM first point

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.