வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் - இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் (உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்)
பதிவு : நவம்பர் 10, 2021, 03:42 PM
கோவையில் வளர்ப்பு நாயை இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் வளர்ப்பு நாயை இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை சிட்கோ, அடுத்த பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது வளர்ப்பு நாயை தினமும் அடித்து கொடுமைப்படுத்துவதாக அப்பகுதி மக்கள், விலங்கு நல ஆர்வலர்களுக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அவர்கள் சோதனை செய்த போது சதீஷ், தன் வீட்டில் வளர்க்கும் நாயை கொடூரமாக அடித்து துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சதீஷ் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாயை அவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.