9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு
பதிவு : நவம்பர் 09, 2021, 10:05 PM
9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில், நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,

கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், 
மயிலாடுதுறை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. 


இதனிடையே, திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் நாளை பள்ளிகளுக்கும், 


மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.