இந்திய அணி தோல்வியை ஐபிஎல்லுடன் தொடர்புபடுத்தி கபில்தேவ் மற்றும் ரவி சாஸ்திரி கூறிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன
பதிவு : நவம்பர் 09, 2021, 04:42 PM
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை ஐபிஎல்லுடன் தொடர்புபடுத்தி முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை ஐபிஎல்லுடன் தொடர்புபடுத்தி முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்

இருதரப்பு தொடர்கள், பயிற்சி ஆட்டங்களில் எல்லாம் அதிரடி காட்டிய இந்திய அணி, 

மிகமுக்கிய இரண்டு போட்டிகளில் கோட்டைவிட்டது.

இதனால் உலகக்கோப்பை கனவு தகர்ந்து போக, கடும் விமர்சனத்திக்குள்ளாகினர் இந்திய வீரர்கள்.

நாங்கள் தைரியமாக செயல்படவில்லை என கேப்டன் கோலி கூறியதும், மனசோர்வுதான் தோல்விக்கு காரணம் என பும்ரா கூறியதும் பலரது கவனத்தை ஈர்த்தது.

உலகக்கோப்பை தொடருடன் பயிற்சியாளர் பொறுப்பை நிறைவு செய்த ரவிசாஸ்திரி, நமீபியா போட்டிக்கு பின்னர் கூறிய கருத்து பேசுபொருளாகியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகள் எனப்படும் பபுலில் வீரர்கள் இருக்கின்றனர். அதிலும் சில வீரர்கள் கடந்த 25 மாதங்களில் மொத்தமாக 25 நாட்கள் கூட வீட்டில் இருந்திருக்க மாட்டார்கள் என கூறினார்... 

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் இதுபோன்ற பபுலில் இருந்திருந்தால், அவ்வளவு சராசரியை வைத்திருக்க மாட்டார் என தெரிவித்தார்.

உலகக்கோப்பை போன்ற சர்வதேச தொடர்களுக்கு முன் வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பதை இந்தியா மட்டுமல்ல, சர்வதேச நிர்வாகங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார் ரவி சாஸ்திரி.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.