8 வருட காதல் உயிரை பறித்த சோகம் - விசாரணைக்கு சென்றவர் சடலமாக மீட்பு
பதிவு : நவம்பர் 09, 2021, 04:36 PM
கன்னியாகுமரி அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். 27 வயதான பெயிண்டிங் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். 

இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளது. இருவரும் இருவேறு சாதியினர் என்பதால் பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்த பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளது. காதலை பிரிப்பதில் தீவிரமாக இருந்த பெண் வீட்டார், வேறொரு இளைஞருடன் அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர். 

ஆனால் சுரேஷ்குமார் இந்த திருமணத்திற்கு இடையூறாக இருப்பார் என கருதிய பெண் வீட்டார், அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதற்காக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விசாரணைக்கு அழைக்கவே, சுரேஷ்குமார் சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

சுரேஷ்குமாரை காணாமல் பதறிப் போன உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது, அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்டார். உடலில் காயங்கள் இருந்ததால் இது கொலை தான் என குற்றச்சாட்டு முன்வைக்கும் உறவினர்கள், இதற்கு பெண் வீட்டாரே காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.