பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் 5ஆம் ஆண்டு
பதிவு : நவம்பர் 08, 2021, 09:48 PM
இன்றுடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு ஐந்த ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், பொது மக்கள் வசம் உள்ள பணத்தின் மதிப்பு 64 சதவீதம் அதிகரித்துள்ளது
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் 5ஆம் ஆண்டு

இன்றுடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு ஐந்த ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், பொது மக்கள் வசம் உள்ள பணத்தின் மதிப்பு 64 சதவீதம் அதிகரித்துள்ளது.2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு தொலைகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.கருப்பு பணம் ஒழிப்பு, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை முறையை ஊக்கப்படுத்தவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைத்து, வங்கி மற்றும் கடன் அட்டைகள், டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகளை அதிகரிக்க செய்ய, பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஊக்கமளிக்கும் என்று சொல்லப்பட்டது.2016 நவம்பர் 4இல் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தின் அளவு 17.74 லட்சம் கோடியாக இருந்ததாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை கூறியிருந்தது.2021 அக்டோபர் 29இல் இது 64 சதவீதம் அதிகரித்து 29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.கடந்த 5 ஆண்டுகளில் ரொக்க பணப் பரிமாற்றத்தின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது,பண மதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை என்பதை சுட்டுவதாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.கடந்த ஒரு ஆண்டில் மட்டும் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு 2017இல் 12.6 சதவீதமாக இருந்து 2021இல் 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிற செய்திகள்

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

63 views

மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி

12 views

பாதுகாப்புப் படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - இணையவசதி முடக்கம்

நாகாலாந்து மோன் மாவட்டத்திலுள்ள அசாம் ரைபிள் படையின் முகாமை முற்றுகையிட்டுள்ள நாகா மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

8 views

பணி நியமனம் கோரி ஆசிரியர்கள் அமைதி போராட்டம் - ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு நடப்பதாக கூறி அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிர்யர்களை ஓடவிட்டு போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பாஜக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

189 views

ஆதரவற்ற 135 இளம் பெண்களுக்கு திருமணம் - களைகட்டிய திருமண விழா

குஜராத்தில், ஆதரவற்ற இளம் பெண்கள் 135 பேருக்கு, மகேஷ் ஸவனி என்ற தொழிலதிபர் நடத்தி வைத்த திருமண விழா களைகட்டியது.

7 views

300 பெண்களுக்கு திருமணம்... தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்

நேற்றும், இன்றும் நடந்த திருமணத்தில் மட்டும் 300 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.