திரையரங்குகளில் 100 % இருக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி
பதிவு : நவம்பர் 08, 2021, 09:21 PM
தமிழகத்தில் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கையை பயன்படுத்த அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம்
திரையரங்குகளில் 100 % இருக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி  

தமிழகத்தில் திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கையை பயன்படுத்த அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் 100 % இருக்கையை பயன்படுத்த அனுமதியளித்து பிறக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.திரையரங்குகளில் 100 % இருக்கைக்கு அனுமதியளிப்பதால் கொரோனா பரவல் அபாயம் உள்ளதாக  உடன்குடியை சேர்ந்த மனுதாரர் சிவமுருகன் ஆதித்தன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது நிபுணர்களின் ஆலோசனைபடி அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், உத்தரவில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மீன் சந்தைகளில் இருப்பதை போன்று திரையரங்குகள் இருக்காது எனவும் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.பண்டிகை காலங்களில் கொரோனா தாக்கம் அபாய அளவை தாண்டிவிடவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள்,இதுபோன்று ஆதாரம் இல்லாமல் வழக்குகளை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது எனவும் கூறினர்.

பிற செய்திகள்

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

7 views

மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

9 views

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

7 views

மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்து - 12 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

15 views

"வேளச்சேரி வீட்டில் இருந்து திருமாவளவன் இப்படி வெளியே வந்தது ஏன்?"விசிக விளக்கம்

வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்பதை மழை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

14 views

தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் மத்தியில் அச்சம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.