மீனவ கிராமத்தில் நடந்த தாக்குதல் - சிகிச்சை பலனின்றி மீனவர் உயிரிழப்பு
பதிவு : நவம்பர் 08, 2021, 09:14 PM
கன்னியாகுமரி அருகே மீனவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீனவ கிராமத்தில் நடந்த தாக்குதல் - சிகிச்சை பலனின்றி மீனவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே மீனவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் புரூனோ. 52 வயதான இவர், சாஸ்தான்கரை பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே குறும்பனை பகுதியில் உள்ள மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த மாதம் அங்கு நடந்த திருமணத்திற்கு தனக்கு அழைப்பிதழ் வரவில்லை என கூறி அதே பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவரிடம் புரூனோ தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதில் புரூனோவை அந்தோணி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2ஆம் தேதி மீண்டும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட புரூனோவை அந்தோணியின் உறவினர்கள் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒருவர் கைதான நிலையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிற செய்திகள்

"142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்" - துரைமுருகன் அதிரடி பேட்டி

முல்லை பெரியாறு அணை நான்காவது முறையாக நிரம்பி உள்ளதாகவும்,142 அடி தண்ணீர் நிரப்பி காட்டிருக்கிறோம் என்று, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

0 views

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க தற்காலிகமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

0 views

30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இனங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்

9 views

ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தலால், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

10 views

"குழந்தைகளுடன் தவிக்கிறோம்" - கடலூர் மக்கள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

62 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.