கேந்திரிய பள்ளியில், தமிழை கட்டாயமாக்க கோரிய விவகாரம்
பதிவு : நவம்பர் 08, 2021, 06:28 PM
கேந்திரிய பள்ளியில், தமிழை கட்டாயமாக்க கோரிய விவகாரம்
கேந்திரிய பள்ளியில், தமிழை கட்டாயமாக்க கோரிய விவகாரம்
 

கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில், மாநில மொழிகளை பயிற்றுமொழியாக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வகுமார், மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ள 59 கேந்திரிய வித்யாலய பள்ளிகளில், இந்தி கட்டாயப் பாடமாக உள்ளது என குற்றம் சாட்டினார்.கேந்திரிய பள்ளிகளில் படிக்கும் 95 சதவிகிதம் பேர் இந்தி, சமஸ்கிருதம் தெரியாதவர்கள் என் றும், அந்தப் பாடங்களை அவர்களுக்கு கட்டாயமாக்கி பயிற்றுவிப்பது அநீதியானது என்றும் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிடக் கோரினார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ் ஒரு பாடமாக உள்ளதாகவும், விரும்புவோர் கற்கும் வகையில் உள்ளதாகவும் கூறிய மத்திய அரசு, மாநில மொழிகளை பயிற்றுமொழியாக்க முடியாது என விளக்கம் அளித்தது.வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் நோக்கில் கே.வி. பள்ளிகள் உள்ளதாக கூறியதுடன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

பிற செய்திகள்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

3 views

10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............

20 views

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

83 views

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

3 views

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

6 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.