மழை பொழிவும், ஏரிகளின் நிலையும்...
பதிவு : நவம்பர் 08, 2021, 01:25 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் லேசாக மழை குறைந்த நிலையில், ஏரிகளுக்கான நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் லேசாக மழை குறைந்த நிலையில், ஏரிகளுக்கான நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.  பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில், நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரை கன மழை கொட்டியது. சோழவரத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், மூவாயிரத்து 800 கனஅடியாக இருந்த புழல் ஏரிக்கான நீர்வரத்து, ஆயிரத்து 357 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால், உபரி நீர் திறப்பு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீரிருப்பு 2 ஆயிரத்து 916 கனஅடியாக உள்ளது.சோழவரம் ஏரிக்கு ஆயிரத்து 585 கனஅடியாக இருந்த நீர்வரத்து 528 கனஅடியாகி உள்ளது. அங்கிருந்து, ஆயிரத்து 200 கனஅடி உபரி திறக்கப்படுகிறது. ஏரியில் 908 மில்லியன் கனஅடியாக நீரிருப்பு உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக கடந்த ஆண்டு உருவான கண்ணன்கோட்டை ஏரிக்கு 150 கனஅடியாக இருந்த நீர்வரத்து 90 கனஅடியாக குறைந்த நிலையில், நீர்வரத்து அப்படியே உபரியாக வழிந்தோடுகிறது. மழை பொழிவு மற்றும் நீர்வரத்தை பொறுத்து, ஏரி திறப்பு இருக்கும் என கூறியுள்ள நீர்வளத்துறை, தேவையான நீரை இருப்பு வைக்கும் வகையில், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

211 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

120 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

26 views

பிற செய்திகள்

கணவனை பிரிந்து வாழ்ந்த பள்ளி முதல்வர் சந்தேக மரணம்?

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளியின் முதல்வரான 35 வயது பெண், விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

15 views

மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதல் கணவன்

ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

ஜெ.வின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் - போயஸ் இல்ல வழக்கின் ஆவணங்களை வைத்து தீபக் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.

8 views

ஜெயலலிதா போல் உடையணிந்து பெண் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல உடையணிந்து, அவரது நினைவிடத்தில் பெண் ஒருவர் மரியாதை செலுத்தினார்.

14 views

ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

12 views

வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

கோவையில் சுரங்கப்பாதையில் சிக்கிய காரை மீட்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.