சென்னையின் பல இடங்களில் மழை பாதிப்பு - 2-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
பதிவு : நவம்பர் 08, 2021, 11:49 AM
சென்னையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை 2-வது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை 2-வது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதலில் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட கல்யாணபுரம் பகுதிக்கு முதலமைச்சர் சென்றார். அங்கு பக்கிங்காம் கால்வாய் பகுதியை பார்வையிட்ட அவர், கரையின் உறுதிதன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த மக்கள், தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சினை மற்றும் கோரிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர்.  

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் - நிவாரண பொருட்கள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

இதைதொடர்ந்து, சென்னை ராயபுரம், ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதியை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்ககு உணவு மற்றும் நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

181 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

86 views

பிற செய்திகள்

மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

4 views

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

7 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

45 views

என் சாவிற்கு காரணம் நீ தான் - தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மெசேஜ்

காதலித்து ஏமாற்றியதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் , காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

705 views

வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் - "அறிக்கைக்கு பின் இழப்பீடு குறித்த முடிவு"- செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், கால்வாயை தூர்வாரவும், கிளைக்கால்வாய்கள் உருவாக்கவும், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

9 views

ரூ.42 கோடியில் கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம் - பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் சிரமம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வாகன நிறுத்துமிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.