இலங்கைக்கு 100 டன் நேனோ உரம் - 2 இந்திய விமானப் படை விமானங்கள்
பதிவு : நவம்பர் 06, 2021, 07:04 PM
இலங்கைக்கு 100 டன்கள் நேனோ உரங்களை இந்தியா அனுப்பியுள்ளது.
இலங்கையில் ரசயான உரங்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு, இயற்கை விவசாய முறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரங்களில் பாக்டீரியா தாக்குதல் இருப்பதை கண்டறிந்த இலங்கை அரசு, அதை ஏற்க மறுத்து விட்டது. இதனால் சீனா, இலங்கை இடையே மோதல்கள் ஏற்பட்டு, இலங்கை மக்கள் வங்கியை, சீனா பதிலுக்கு தடை செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவிடம் நேனோ நைட்ரஜன் உரங்களை இலங்கை அரசு கோரியிருந்தது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு சரக்கு விமானங்கள் மூலம், 100 டன்கள் எடை கொண்ட நேனோ நைட்ரஜன் உரங்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இலங்கையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இலங்கை விவசாயிகளுக்கு நேனோ நைட்ரஜன் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வகை செய்யவும் இது பயன்படும் என்று இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.