உணவகத்தில் கொள்ளையடித்த ஊழியர் - பணியில் சேர்ந்த 2 தினங்களில் கைவரிசை
பதிவு : நவம்பர் 06, 2021, 06:57 PM
தருமபுரி மாவட்டம் அரூரில், பணியில் சேர்ந்த இரண்டே தினங்களில் உனவகத்தில் இருந்து ஊழியர் ஒருவர் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாயைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலமுருகன் என்பவரது உணவகத்தில் புதிதாக வாணியம்பாடியைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு ரிஸ்வான் மற்றும் மற்றொரு ஊழியர் அஜித் ஆகியோர் மது அருந்தி விட்டு கடையில் உறங்கியுள்ளனர். காலை கடையைத் திறந்து பார்த்த போது, கல்லாவில் இருந்த 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தை அடுத்து ரிஸ்வான் தலைமறைவான நிலையில், உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில், அதிகாலை 4 மணிக்கு ரிஸ்வான் கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து பாலமுருகன் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

"மழை பாதிப்பை தடுக்க மூன்று கால திட்டங்கள்"

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

5 views

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

6 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

8 views

அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்?

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

12 views

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

15 views

பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவன் பயணம்... அதிர்ச்சி காட்சி

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.