அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் - சீனாவின் ராணுவ பலம் பற்றி அறிக்கை
பதிவு : நவம்பர் 06, 2021, 05:30 PM
அருணாச்சல பிரதேசத்தில் ஒரு புதிய கிராமத்தை சீன ராணுவம் உருவாக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில், இந்திய சீன எல்லைப் பகுதியில், சாரி ஆற்று பகுதியை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. சர்ச்சைக்குரிய இந்த பகுதியில் ஒரு புதிய கிராமத்தை சீன ராணுவம் உருவாக்கியுள்ளதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. நூறு குடியிருப்புகள் கொண்ட இந்த கிராமத்தை 2020இன் இறுதியில் சீனா நிர்மாணித்ததாக பென்டகன் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய சீன எல்லை பிரச்சனையை தீர்க்க நடத்தப்படும் பேச்சுவார்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில், படிப்படியாக ராணுவ கட்டுமானங்களையும், ஆக்கிரமப்புகளையும் சீன ராணுவம் அதிகரித்து வருவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீன விமானப் படை மற்றும் கப்பற்படைகள், மேற்குலக நாடுகளுக்கு இணையாக பலம் பெற்று வருவதாக கூறியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.