நவ.10 - டெல்லியில் ஆப்கன் பாதுகாப்பு மாநாடு - அஜித் தோவல் தலைமையில் மாநாடு
பதிவு : நவம்பர் 06, 2021, 05:27 PM
நவம்பர் 10 அன்று டெல்லியில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்பான பிராந்திய பாதுகாப்பு மாநாட்டை நவம்பர் 10இல் டெல்லியில் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதற்கு தலைமை தாங்க உள்ளார். ரஷ்யா, ஈரான் மற்றும் இதர மத்திய ஆசிய நாடுகள் இதில் கலந்து கொள்ள சம்பதம் தெரிவித்துள்ளன. ஆனால் பாகிஸ்தான் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கூறிவிட்டது. இதில் கலந்து கொள்வது பற்றி
சீனா இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. உணவு பஞ்சத்தை எதிர் கொண்டுள்ள ஆபாகின்ஸ்தானிற்கு, பாகிஸ்தான் வழியாக லாரிகள் மூலம் கோதுமையை அனுப்ப இந்தியா முன் வந்துள்ளது. ஆனால் இதற்கும் பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்

வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை - பிரதமர் மோடி

தாங்கள் வாக்கு வங்கி அரசியல் செய்வது இல்லை என்றும், மக்களுக்கு சேவை செய்யவே முன்னுரிமை அளித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

1 views

"மக்களுக்கு வலி ஏற்படும்போது அரசு தூங்குகிறது" - மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

நாட்டு மக்களுக்கு வலி ஏற்படும் போது மத்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

6 views

"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

830 views

"ஜவாத் புயல்...70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்"

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜவாத் புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

10 views

ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் வந்தவருக்கு ஒமிக்ரான்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

10 views

புதுச்சேரியில் பாரதியாருக்கு மிக உயரமான சிலை

புதுச்சேரி கடற்கரையில் மகாகவி பாரதியாருக்கு மிக உயரமான சிலை அமைக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.