பூமிக்கும் திரும்பும் விண்வெளி வீரர்கள் - டயப்பருடன் பயணிக்க வேண்டிய கட்டாயம்
பதிவு : நவம்பர் 06, 2021, 03:58 PM
சர்வதேச விண்வெளி வீரர்கள் புறப்படும் விண்ணூர்தியில் கழிவறை உடைந்ததால், 20 மணி நேரம் டயப்பருடன் பூமிக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழுவை கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பியது. 6 மாத ஆராய்ச்சி காலம் முடிவடைந்த நிலையில், திங்கட்கிழமை அன்று ஆராய்ச்சியாளர்கள் தரையிறங்குகின்றனர். இந்த சூழலில், வீரர்கள் பயணிக்கும் விண்ணூர்தியில் கழிவறை உடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பூமிக்கு திரும்பும் போது, 20 மணி நேர பயணத்தில் கழிவறையை பயன்படுத்த முடியாது என்பதாக், டயப்பருடன் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விண்வெளி பயணம் முழுவதும் பல சவால்கள் இருந்ததாக கூறிய ஆராய்ச்சியாளர்கள், இந்த சவாலையும் சமாளிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

உக்ரேன் மீது படை எடுக்க ரஷ்யா ஆயத்தம் - எல்லைப் பகுதியில் 1.75 லட்சம் வீரர்கள்

உக்ரேன் மீது ரஷ்யா படை எடுக்க தயாராகி வருகிறது. இதைப் பற்றி ரஷ்ய அதிபர் புட்டினுடன், நீண்ட விவாதம் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

13 views

டிவிட்டர் CEOஆக பதவியேற்றார் பரக் அகர்வால் - டிவிட்டர் நிர்வாக குழுவில் அதிரடி மாற்றங்கள்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பரக் அகர்வால், நிர்வாகத்தில் அதிரடியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

174 views

"ஒமிக்ரான் பற்றி அச்சம் தேவையில்லை" - WHO விஞ்ஞானி தகவல்

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

20 views

4 பேரை சுட்டுக் கொன்ற பள்ளி மாணவன்

அமெரிக்காவின், மிச்சிகனில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், சக மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.

8 views

ஐ.நா. தலைமை அலுவலகத்திற்கு - துப்பாக்கியுடன் வந்த முதியவர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுசபையின் தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

இலங்கை எம்.பி. சரத் பொன்சேகா சர்ச்சை பேச்சு

மாவீரர் தின அனுசரிப்பை இலங்கை அரசு தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.