ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி - மக்களை பார்த்ததும் தப்பி ஓடிய கொள்ளையர்கள்
பதிவு : நவம்பர் 06, 2021, 11:58 AM
திருவிடைமருதூர் அருகே பாங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
திருவிடைமருதூர் அருகே பாங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. 
வேப்பத்தூர் பரோடா பாங்க் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. இதனால் ஐதாரபாத்தில் உள்ள அலுவலகத்தில் எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது. உடனடியாக வங்கி அதிகாரிகள் நாகையில் உள்ள தனியார் பாதுகாப்பு காவலாளிகள் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து ஏடிஎம் அருகே வசிப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கூறப்பட்டுள்ளது. உடனடியாக ஊர்மக்கள் சிலர் ஒன்று திரண்டு ஏடிஎம் நோக்கி படையெடுத்துள்ளனர். மக்களை பார்த்ததும் வெலவெலத்து போன கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை சேகரித்த திருவிடைமருதூர் போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

526 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

118 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

97 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

51 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

42 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

30 views

பிற செய்திகள்

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

21 views

"பெயரை வைப்பதற்கே திட்டத்தை தொடங்கினார்கள்" - சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சேலத்தில் அம்மா கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

11 views

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

23 views

"6- 7 முறை நில அதிர்வை உணர்ந்தோம்" - நில அதிர்வு... மக்கள் பீதி...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

20 views

"திமுகவைவிட அதிகம் கஷ்டப்பட்டது யாரும் இல்லை"

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக பல தியாகங்கள் செய்து இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.

12 views

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு - வெற்றிப் படங்களின் நடன இயக்குநர் சிவசங்கர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடன இயக்குநர் சிவசங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திரையுலகில் அவர் ஜொலித்த தருணங்களை நினைவுகூரும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.