முல்லை பெரியாறு அணை திறப்பு - அதிமுக போராட்டம் அறிவிப்பு
பதிவு : நவம்பர் 02, 2021, 01:39 PM
முல்லை பெரியாறு அணையின் நீர் இருப்பை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளாது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், 

திமுக ஆட்சிக்கு வரும் காலங்களில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகளை பலி கொடுப்பது தொடர்வதாகவும்,  

முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் சேகரிக்கலாம் என 15 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அணையின் உறுதி தன்மையை மேலும் நிலைநாட்டி 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும், இதற்கு கேரள அரசு எந்தவித மறுப்பும் தெரிவிக்க கூடாது என  உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்பொழுது முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேள்வி குறியாகியுள்ளதாக குற்றம்சாட்டிய அதிமு தலைமை,  

அணையில் நீரின் அளவு 138 அடியை எட்டுவதற்குள் கேரள அமைச்சர்களை சாட்சிக்கு வைத்து கொண்டு தமிழக அரசு மதகுகளை திறந்து விட்டதாக கூறியுள்ளது.  

மேலும், திமுக அரசை கண்டித்து 9ம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் அதிமுக தொண்டர்களும், விவசாய பெருங்குடிகளும், பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

57 views

(28.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - OPS - EPS மோதல் காதலாக மாறுதா? கி.வீரமணி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் திராவிட கொள்கை விளக்கமா?

(28.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - OPS - EPS மோதல் காதலாக மாறுதா? கி.வீரமணி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் திராவிட கொள்கை விளக்கமா?

42 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

(25.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஷாருக்கான் மகன் விடுதலைக்கு 25 கோடி லஞ்சமா? ஸ்டாலின் அறிவித்த போனசுக்கு சிபிஎம் எதிர்ப்பு போராட்டமா?

(25.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஷாருக்கான் மகன் விடுதலைக்கு 25 கோடி லஞ்சமா? ஸ்டாலின் அறிவித்த போனசுக்கு சிபிஎம் எதிர்ப்பு போராட்டமா?

21 views

பிற செய்திகள்

லாரி மோதியதில் பெரியார் சிலை சேதம் - விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு | #ThanthiTv

விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது.

2 views

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

13 views

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

10 views

ஊராட்சி மன்ற அலுவலகம் மீது சாணம் வீச்சு - பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

செஞ்சி அருகே பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் ஊராட்சி மன்ற தலைவி புகார் அளித்துள்ளார்.

61 views

வன விலங்குகள் பலி - பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

மின் கம்பிகளில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்காக 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

36 views

சரியான நேரத்திற்கு பணிக்கு வராத அதிகாரிகள் - விளக்கம் அளிக்க அமைச்சர் உத்தரவு

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.