நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்த இந்தியா - விரக்தியில் அணியை சாடும் ரசிகர்கள்
பதிவு : நவம்பர் 01, 2021, 02:31 PM
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான படுதோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...
ஐபிஎல் முடிவடைந்த போது, இந்திய அணியின் பலத்தை பார்த்து, கோப்பை இவர்களுக்கு தான் என கணித்தவர்கள் ஏராளம்...

ஆனால், இப்போது கதையே வேறு... சிலாகித்தவர்கள் எல்லாம், இப்படிதான் விளையாட வேண்டும் என அறிவுரை கூறும் அளவுக்கு அமைந்துவிட்டது நடப்பு டி 20 தொடரில் இந்திய அணியின் ஆட்டம்...

முதல் போட்டியை பற்றி பேசி முடித்துவிட்ட நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் தோற்கும் போதே பல ரசிகர்கள் மனமுடைய,

ரோகித்திற்கு பதிலாக இஷான் கிஷானை தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்...

தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத ஷாட்களை ஆடி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தது அணிக்கு பேரிடி...

முக்கியமான இந்த போட்டியில் ராகுல், ரோகித், கோலி மூவரும் சொதப்பியதும்,மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் பண்ட், பாண்டியா திணறியதும் அணிக்கு மீள முடியாத துயரமானது.

இந்திய அணி ஒட்டுமொத்தமாக அடித்தது 110 ரன்னாக இருந்தாலும், பந்துவீச்சில் துளிகூட வெற்றிக்கான போராட்டம் இல்லாதது கவலை தரும் விஷயமாக அமைந்தது.

மொத்தத்தில், 

டி 20 போட்டி மிகவும் வளர்ச்சியடைந்து வர, இந்திய அணி இன்னும் 10 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் விமர்சிக்கும் அளவு அணியின் செயல்பாடு இருந்தது.

இந்த தொடரை பொறுத்தவரை இந்திய அணிக்கு கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு நழுவிவிட்ட நிலையில்,

அடுத்த 3 போட்டிகளில் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்,

ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் நியூசிலாந்து தோல்வி அடைய வேண்டும்,

என்ற நிலைமை வந்தால், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது...

எது எப்படி இருந்தாலும், அணியின் மோசமான செயல்பாடு, ஒட்டுமொத்த வீரர்கள் தேர்வின் மீதும் கேள்வியை எழுப்பியுள்ளது.

முழு உடற்தகுதி இல்லாத பாண்டியாவை விளையாட வைப்பது ஏன்?
யஷ்வேந்திர சாஹல், ஷ்ரேயஸ் ஐயர், சிராஜ் விளையாடாதது ஏன்? என்ற கேள்விகள் மேலோங்கியுள்ளன.

இனிவரும் ஐசிசி தொடர்களிலாவது சரியான, பலமான வீரர்களை தேர்வு செய்யுங்கள் என விரக்தியோடு நடப்பு தொடரை கடந்து செல்கின்றனர் இந்திய ரசிகர்கள்....

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

63 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

32 views

மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் குடியரசு தினவிழா - அனல் பறக்கும் அணிவகுப்பால் அசரவைத்த வீரர்கள்

லடாக்கில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் கொண்டாடிய குடியரசு தினவிழா

7 views

சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

குடியரசு தினத்தையொட்டி, சுதந்திர போராட்ட தியாகிகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கவுரவித்தார்.

5 views

பிற செய்திகள்

முன்னாள் சபாநாயகர் வீட்டில் கைவரிசை - ரூ.1 லட்சம், வெள்ளி குத்துவிளக்கு திருட்டு

முன்னாள் சபாநாயகரும், அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

0 views

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா

6 views

நிலவில் மோதி வெடிக்கப்போகும் ஏவுகணை - 7 ஆண்டுகளாக விண்ணில் வட்டமடிக்கும் ராக்கெட்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் நிலவில் மோதி வெடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்..

9 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

13 views

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

9 views

குப்பை எடுப்பது போல வந்து திருட்டு - சிக்க வைத்த சிசிடிவி

மதுரையில் அரசு மருத்துவமனையில் குப்பை எடுப்பது போல் வந்து திருடி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.