மாஸ்கோவில் நடைபெற்ற மாநாடு - தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை
பதிவு : அக்டோபர் 22, 2021, 06:14 PM
ஆப்கானிஸ்தானிற்கு மனிதாபிமான உதவிகளை இந்திய வழங்க முன் வந்துள்ளதாக தலிபான் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தானிற்கு தேவையான உதவிகளை அளிக்க, ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட10 நாடுகள் மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.இதில் தலிபான் அரசின் சார்பில் ஆப்கானிஸ்தானின் உதவி பிரதமர் அபுல் சலம் ஹனபி தலைமையில் ஒரு பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது. ஆப்கானிஸ்தானில் மிதவாத கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்றும், சிறுபான்மையினர், பெண்கள், சிறுவர், சிறுமியரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தலிபான் அரசிடம், 10 நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. இந்த மாநாட்டின் ஊடாக தலிபான் பிரதிநிதிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி.சிங் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் தனியாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானிற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை அளிக்க, இந்தியா முன்வந்ததாக, தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.கடந்த மாதம் கட்டார் தலைநகர் தோஹாவில் இந்திய தூதுவர் தீபக் மிட்டால், ஆப்கன் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸை சந்தித்தார். அதன் பிறகு இரண்டாவது முறையாக மாஸ்கோவில் இரு தரப்பினரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

371 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா வண்ண மையமாக தொடங்கியுள்ளது

7 views

ஜெர்மனியில் கொரோனா 4 வது அலை - கொரோனாவை மறந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஜெர்மனியில் கொரோனா 4வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

268 views

பிரசவ வலியுடன் சைக்கிள் ஓட்டிச் சென்ற எம்.பி - அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்

நியூசிலாந்து நாட்டில் பிரசவ வலியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

14 views

சீனாவில் மீண்டும் கொரோனா பேரலை... அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள்

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மீண்டும் சீனாவில் கொரோனா பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

26 views

"ஒமிக்ரான்" பெயருக்கு பின் சீன அதிபரா?

சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.

24 views

மாயாஜால பள்ளி வடிவிலேயே ஒரு கேக் - ஹாரி பாட்டர் பட பாணியில் விநோத முயற்சி

மிகப் பெரிய கேக் செஞ்சு சாதனை படைக்கணும்னு மனக்கோட்டை கட்டி கேள்விப்பட்டிருப்பீங்க. கோட்டை சைஸ்லயே கேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்...

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.