தங்க கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - 29 வது குற்றவாளியாக சிவசங்கர் சேர்ப்பு
பதிவு : அக்டோபர் 22, 2021, 05:55 PM
கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் 29வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சுங்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையானது கொச்சி பொருளாதார  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷரித் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகவும், முன்னாள் தலைமை செயலாளர்  எம்.சிவசங்கர் வழக்கில் 29 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தங்க கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் கே.டி.ரமீஸ். ரமீஸ் தூதரகம் மூலம் 21 முறை தங்கத்தை கடத்தியுள்ளார். மொத்தம் 169 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

15 views

கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்

கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

22 views

ஆளுநருக்காக திறக்கப்பட்ட அணை - பெரும் சர்ச்சை... விசாரணை தீவிரம்...

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை கர்நாடக ஆளுநர் பார்ப்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பெரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

21 views

281 மாணவர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி

கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரி மூடப்பட்டு, கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

11 views

தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த வழக்கு - ஆந்திர தொழிலதிபரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்

சென்னையில் தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் நடந்தது குறித்து இப்போது பார்க்கலாம்...

15 views

பூனை குறுக்கே சென்றதால் அச்சமடைந்த யானை - யானை மிரண்டதால் மக்கள் அச்சம்

கேரளாவில் கோயில் விழாவிற்கு யானை கொண்டு வரப்பட்ட நிலையில், குறுக்கே பூனை ஓடியதால் யானை அச்சமடைந்து, மிரண்டது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.