பிரிட்டனில் கொரோனா தொற்றுதல் அதிகரிப்பு - தினசரி தொற்றுதல் 52,009ஆக உயர்வு
பதிவு : அக்டோபர் 22, 2021, 05:52 PM
வியாழன் அன்று பிரிட்டனில், கொரோனா தொற்றுதலின் தினசரி அளவு 50 ஆயிரத்தை மீண்டும் தாண்டியுள்ளது.
ஜூலை 17க்கு பிறகு, முதல் முறையாக பிரிட்டனின் தினசரி தொற்றுதல்களின் அளவு 52,009ஆக, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 6.72 கோடி மக்கள் தொகை கொண்ட பிரிட்டனில், தற்போது 14.44 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 5.63 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை கொரோனாவிற்கு 1.39 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். தினசரி தொற்றுதல் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக  பிரிட்டனின் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் புதன் அன்று கூறியிருந்தார். ஆனால் தற்போதைக்கு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கப் போவதில்லை என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.  கடந்த நான்கு மாதங்களில் பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலைமையை அரசு கூர்ந்து கவனதித்து வருவதாகவும், தினசரி தொற்றுதல்களின் எண்ணிக்கை முன் கணிப்புகள் கூறியிருந்த அளவுகளுக்குள் தொடர்வதாகவும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்...! - தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம்

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் எந்த நாடுகளுக்கு எல்லாம் பரவியுள்ளது என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

17 views

சீனாவா... தைவானா... யாருக்கு ஆதரவு...? - சாலமன் தீவுகளில் நடப்பது என்ன...?

சாலமன் தீவில் சீனாவுடன் கைகோர்த்து செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து ஆஸ்திரேலியா படையை அனுப்பியுள்ளது.

11 views

95வது நன்றி தெரிவிக்கும் நாள் - ராட்சத பலூன்கள் பறக்கவிடப்படும் நிகழ்வு

அமெரிக்காவில் 95வது நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்தின் போது, ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

26 views

கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியில் கனமழையால் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

22 views

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் - பனிப்பொழிவை ரசிக்கும் மக்கள்

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகள், மரங்கள், கட்டடங்கள் அனைத்தும் பனிப்பொழிவால் நிரம்பியுள்ளன.

21 views

சிறு கோளை தாக்கி திசை திருப்ப முயற்சி - நாசா நிறுவனம் அனுப்பும் விண்கலம்

விண்வெளியில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிறு கோள் ஒன்றின் மீது மோதி அதை திசை திருப்ப, விண்வெளி கலம் ஒன்றை அமெரிக்காவின் நாசா நிறுவனம் இன்று அனுப்பியுள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.