ரஷ்யாவில் கொரோனா உச்சமடைகிறது - மாஸ்கோவில் பள்ளிகள், கடைகள் மூடல்
பதிவு : அக்டோபர் 22, 2021, 05:50 PM
ரஷ்யாவில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் தலைநகர் மாஸ்கோவில் பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட உள்ளன.
ரஷ்யாவில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் தலைநகர் மாஸ்கோவில் பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட உள்ளன. சுமார் 14.6 கோடி மக்கள்தொகை கொண்ட ரஷ்யாவில், நேற்று 36 ஆயிரத்து 339 கொரோனா தொற்றுதல் மற்றும்1036 உயிரிழப்பு பதிவாகியுள்ளன. கொரோனா தொற்றுதல் தொடங்கிய பின், ரஷ்யாவில் இது தான் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை. ரஷ்யாவில் இதுவரை 2.27 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இதுதான் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனால் அக்டோபர் 28 முதல், 11 நாட்களுக்கு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பள்ளிகள், உணவு விடுதி, திரையரங்கு, கேளிக்கை அரங்குகள் மற்றும் பெரிய கடைகள் மூடப்படும் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ஸ்புட்னிக் வி எனப்படும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யாவில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏராளமானவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களை உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

407 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

111 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

57 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

34 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

29 views

இந்தியாவில் முதல்முறையாக பூஸ்டர் டோஸ்க்கு பரிந்துரை

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது,

16 views

பிற செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

8 views

ஹெல்மெட் அணிந்து சமைக்கும் பெண்கள்...! காரணம் என்ன..?

இலங்கையில் சமையல் செய்த போதே சமையல் எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வெடித்து சிதறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

7 views

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

18 views

35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

40 views

"தமிழ் பாரம்பரிய மாதம்" - லண்டனில் எழுந்த கோரிக்கை

ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என லண்டன் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

10 views

வியட்நாமில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 18 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்

வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளால் இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.