100 கோடி தடுப்பூசி - பிரதமர் மோடி பெருமிதம்
பதிவு : அக்டோபர் 22, 2021, 04:40 PM
100 கோடி தடுப்பூசி என்பது வெறும் எண் அல்ல, புதிய இந்தியாவின் அடையாளம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்.
நாட்டில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், இந்த சாதனை 130 கோடி மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி, இந்தியாவின் புதிய அத்தியாயம் என தெரிவித்தார். கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவின் திறன் குறித்து சிலர் சந்தேகங்கள் எழுப்பியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆனால் அவர்களுக்கெல்லாம் இன்று நாம் பதில் அளித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்
இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தில் விஐபி கலாச்சாரம் முற்றிலும் இல்லை என குறிப்பிட்ட பிரதமர் மோடி,தடுப்பூசி திட்டம் விஞ்ஞான வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்தார்.தடுப்பூசி போடுவதில் தயக்கம் என்பது பல்வேறு நாடுகளில் பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்தாலும், 100 கோடி தடுப்பூசி என்கிற சாதனையை எட்டி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டதாக குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்த தேசம் என்ற நிலை மாறி, தற்போது சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் தேசம் என்கிற நிலையை எட்டி இருப்பது மிகப் பெரும் சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முந்தைய காலங்களில் பொருட்கள் இந்த நாட்டில் உருவாக்கியவை, அந்த நாட்டில் உருவாக்கப்பட்டவை என பேசி வந்த நாம்,இப்போது மேட் இன் இந்தியா பற்றி அதிகம் பேச தொடங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
100 கோடி தடுப்பூசி என்பது வெறும் எண் அல்ல, புதிய இந்தியாவின் அடையாளம் என குறிப்பிட்ட மோடி,பண்டிகை காலம் வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.முதல் டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி,பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை வழக்கமான நடைமுறையாக கடைப்பிடித்து பொது இடங்களில் கட்டாயம் அணிய வேண்டும்  என வலியுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

371 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

84 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

48 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

29 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி

கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன..

14 views

பிற செய்திகள்

பெண் எம்.பிக்கள் புடைசூழ நிற்கும் சசி தரூர் - "மக்களவை வசீகரமான இடம் இல்லையா?"

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை எம்.பி சசி தரூர், பெண் எம்.பிக்களுடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

15 views

எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே 4 நிமிடங்களில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில், கடும் அமளிகளுக்கு இடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

56 views

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

47 views

மகள்களையும், மருமகள்களையும் கொண்டாடும் கிராமம் - வீட்டு முன்பு பெண்களின் பெயர்பலகைகள்

பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்...

17 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

17 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.