"சம்பா சாகுபடிக்கு உரம் தேவை"- மத்திய உரத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பதிவு : அக்டோபர் 22, 2021, 03:47 PM
தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை உடனடியாக வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய உரத்துறை அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  தென்மேற்கு பருவமழை இன்னும் தொடர்வதால் வரும் 26ஆம் தேதி தமிழகத்தில் சம்பா சாகுபடி அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.  இந்த நேரத்தில் யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.  சம்பா சாகுபடி தமிழகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இந்த ஆண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வினியோகத் திட்டத்தின் படி தமிழகத்திற்கு தேவையான நிலுவையில் உள்ள யூரியா உரத்தை குறித்த நேரத்திற்குள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  தமிழகத்திற்கு கூடுதலாக 25 ஆயிரம் மெட்ரிக் டன், டிஏபி மற்றும் 10 ஆயிரம் மெட்ரிக் டன் எம்ஓபி உரத்தை வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


பிற செய்திகள்

ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞர்; இணையத்தில் பரவிய வீடியோ - பரபரப்பு

கடலூர் அருகே ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவியது.

11 views

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

18 views

10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............

28 views

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

95 views

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

3 views

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.