மேடையில் ஏறிய சிறுவன் - போப் ஆண்டவரிடம் செய்த குறும்புகள்
பதிவு : அக்டோபர் 21, 2021, 03:51 PM
வாட்டிகனில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையில் ஏறிய சிறுவன் செய்த குறும்புத்தனங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று புதன்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான்.இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர் சிறுவனிடம் அன்பாகப் பேசினார். அப்போது அவரது கைகளை பிடித்துக்கொண்டு அந்த சிறுவன் துள்ளிக் குதித்து விளையாடியதை கண்டு பார்வையாளர்கள் திகைத்துப்போயினர். பின்னர், மீண்டும் போப் ஆண்டவரின் அருகே சென்ற சிறுவன், ஒரு கட்டத்தில், அவர் அணிந்திருக்கும் வெள்ளை தொப்பியை கொடுக்கச்சொல்லி அடம்பிடித்தான்.சிறுவனின் இந்த செய்கையை கவனித்த, நிகழ்ச்சியின் தலைவர், சிறுவனை சமாதானப்படுத்தி தனது இருக்கையில் அமரவைத்தார்.அதன்பிறகும் வேகம் குறையாத அந்த சிறுவன், மற்றொருவரை கையை பிடித்து அழைத்து வந்து போப் ஆண்டவரிடம் தொப்பியை வாங்கித் தருமாறு கேட்டதால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது.
இறுதியாக, என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை கொடுத்ததால், சிறுவனின் ஆசை நிறைவேறியது.போப் ஆண்டவரின் தொப்பியை அணிந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் மேடையில் இருந்து இறங்கிய சிறுவனை அனைவரும் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.சிறுவனின் இந்த குறும்புத்தனங்கள் எதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ, போப் ஆண்டவரின் பாதுகாவலர்களோ,தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய போப் ஆண்டவர், அந்த சிறுவன் தன் மனதில் இருந்த உணர்வுகளை எந்த கட்டுப்பாடுகளுமின்றி வெளிப்படுத்தியுள்ளார் எனவும், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

680 views

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

607 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

181 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

87 views

பிற செய்திகள்

ஹெல்மெட் அணிந்து சமைக்கும் பெண்கள்...! காரணம் என்ன..?

இலங்கையில் சமையல் செய்த போதே சமையல் எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வெடித்து சிதறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 views

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

16 views

35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

38 views

"தமிழ் பாரம்பரிய மாதம்" - லண்டனில் எழுந்த கோரிக்கை

ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என லண்டன் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

10 views

வியட்நாமில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 18 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்

வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளால் இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

57 views

ஏய்.. தள்ளு.. தள்ளு...! பஞ்சர் ஆன விமானம்... தம்கட்டி தள்ளிய பயணிகள்!

நேபாளத்தில் விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் விமானத்தை தள்ளிச் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

214 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.