10% இடஒதுக்கீடு- உச்சநீதிமன்றம் கேள்வி
பதிவு : அக்டோபர் 21, 2021, 03:36 PM
உயா் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கான ஆண்டு வருவாய் எட்டு லட்சம் என்று நிர்ணயித்தது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயா் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கான ஆண்டு வருவாய் எட்டு லட்சம் என்று நிர்ணயித்தது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவர் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிக்கையை செயல்படுத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த நெயில் ஆரோல்யோ நியூன்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவ மாணவர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரிட் மனுக்களை விசாரித்த நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கான ஆண்டு வருவாய்  8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது எப்படி? என கேள்வி எழுப்பினர். சினோ கமிட்டி அடிப்படையில்தான் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டது என்றால் அது தொடர்பான நகலை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறினர். இந்த கேள்விகளுக்கு விரிவான பிரமாண பத்திரம் 2 வாரத்திற்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாளை மறுதினம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

பிற செய்திகள்

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

9 views

வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

7 views

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 views

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

8 views

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

20 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.