100 கோடி தடுப்பூசிகள் - பிரதமர் பெருமிதம்
பதிவு : அக்டோபர் 21, 2021, 03:29 PM
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா 100 கோடி தடுப்பூசிகளை கடந்த இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் கட்டப்பட்டுள்ள விஷ்ரம் சதன் கட்டிடத்தை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.அப்போது பேசிய அவர், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ள இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த சாதனைக்கு காரணமான பணியாளர்களுக்கு நன்றி எனவும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த சாதனை சொந்தமானது என தெரிவித்தார். மேலும், தேசிய புற்றுநோய் மையத்தில் கட்டப்பட்டுள்ள விஷ்ரம் சதன் கட்டிடம் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் கவலைகளை குறைக்கும் எனவும் நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில் கார்ப்பரேட் துறைகள், தனியார் துறைகள் மற்றும் சமூக அமைப்புகள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் மருத்துவ சிகிச்சைகள் பணக்காரர்களுக்கு கிடைப்பது போல் ஏழைகளுகளுக்கும் கிடைக்கும் வகையில் இந்திய சுகாதார துறையின் முகத்தை மாற்ற அரசு விரும்புவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

200 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

107 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

22 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

584 views

"ஜவாத் புயல்...70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்"

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜவாத் புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

9 views

ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் வந்தவருக்கு ஒமிக்ரான்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

8 views

புதுச்சேரியில் பாரதியாருக்கு மிக உயரமான சிலை

புதுச்சேரி கடற்கரையில் மகாகவி பாரதியாருக்கு மிக உயரமான சிலை அமைக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

7 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

25 views

கேரள நகராட்சி ஊழியர் சங்க மாநாடு - கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்

அரசு அதிகாரிகள் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.