விசாரணை வளையத்தில் விஜயபாஸ்கர் - குவாரி, கல்வி நிறுவனங்களில் சோதனை
பதிவு : அக்டோபர் 18, 2021, 05:08 PM
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 48 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 48 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....

அதிமுக ஆட்சியின் போது அமைச்சரவையில் இருந்த எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.. இந்த வரிசையில் தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரும் சேர்ந்துள்ளார். 

வருமானத்திற்கு அதிகமாக சி.விஜயபாஸ்கர் சொத்துகள் சேர்த்திருப்பதாக வந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 

மேலும் விஜயபாஸ்கரின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான முருகேசன், அதிமுக நகர செயலாளர் பாஸ்கர், இவரின் சகோதரர் பாபு உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. 

விஜயபாஸ்கரின் உதவியாளரான அன்பானந்தம், அன்னவாசல் ஒன்றிய குழு தலைவரும் நண்பருமான ராமசாமியின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. 

இதேபோல் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார். மெட்ரிகுலேஷன் பள்ளி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட 14 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். 

இந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காரணம் இந்த கல்வி நிறுவனங்கள் அனைத்தும், விஜயபாஸ்கர் பதவியில் இருந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதால் இதன் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருப்பதும் பிரதான காரணமாக உள்ளது. 

இதேபோல் விஜயபாஸ்கரின் சகோதரரான உதயகுமாருக்கு சொந்தமாக திருச்சியில் வீடு உள்ள நிலையில் அங்கும் சோதனை நடந்து வருகிறது. இதேபோல் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான குரு ராஜமன்னாருக்கு சொந்தமாக திருச்சியில் உள்ள வீட்டில் சோதனை நடந்து வருகிறது. 

இதேபோல் கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் வீட்டிலும், விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய ஐரிஸ் ஈகோ பவர் வென்சர் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேபோல் சென்னையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமாக கீழ்ப்பாக்கம் மற்றும் தி.நகரில் உள்ள வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. 

மேலும் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர்களாக இருந்த சரவணன் மற்றும் சீனிவாசன் ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 2 பேரும் குட்கா வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது...

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

544 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

102 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

46 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

23 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

4 views

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் - அரசாணை

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

15 views

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் - ஓபிஎஸ், ஈ பி எஸ் கூட்டாக அறிவிப்பு

29 views

"நான் தங்கி இருப்பது வீடல்ல, அறக்கட்டளை" - வைரல் வீடியோ குறித்து திருமா விளக்கம்

சமூக வலைதளங்களில் பரவிவரும் தனது வீடியோ தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார்.

55 views

"பள்ளி பொதுத்தேர்வை மே மாதம் நடத்த வேண்டும்"

பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

14 views

"142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்" - துரைமுருகன் அதிரடி பேட்டி

முல்லை பெரியாறு அணை நான்காவது முறையாக நிரம்பி உள்ளதாகவும்,142 அடி தண்ணீர் நிரப்பி காட்டிருக்கிறோம் என்று, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.