'இல்லம் தேடி கல்வி' - புதிய திட்டம் - முதலமைச்சருடன் அன்பில் மகேஷ் ஆலோசனை
பதிவு : அக்டோபர் 18, 2021, 02:12 PM
மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்கும் வகையில், "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்காத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களிடையே கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 8ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக 'இல்லம் தேடி கல்வி' என்கிற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தப்பட உள்ளது. தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிற செய்திகள்

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 views

கரூரில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

8 views

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

17 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

11 views

அணைக்கரை கொள்ளிடம் ஆறு - கனமழையால் நிரம்பி காணப்படும் தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

15 views

சேதமடைந்த ஏரியின் முகப்பு பகுதி - கரையை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஏரியில் கரையை உடைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.