வெள்ளத்தில் சாய்ந்து விழுந்த மாடி வீடு -அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியீடு
பதிவு : அக்டோபர் 18, 2021, 12:59 AM
வெள்ளத்தில் சாய்ந்து விழுந்த மாடி வீடு -அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியீடு
வெள்ளத்தில் சாய்ந்து விழுந்த மாடி வீடு -அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியீடு

கேரளாவில், முண்டகாயம் பகுதியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், கரையோரம் இருந்த மாடி வீடு சாய்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முண்டகாயம் பகுதியில், மாடி வீடு ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. முன்னதாகவே ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், அங்கு வசித்த குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இதனால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில், சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.