தாமதமின்றி நிவாரண உதவி - முதல்வர் உத்தரவு
பதிவு : அக்டோபர் 17, 2021, 04:56 PM
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த கூட்டத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.கனமழை பெய்துவரும் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.அடுத்துவரும் மழை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். முகாம்களில் பொதுமக்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய தொடர்புடைய துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கனமழை வெள்ளத்தால், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 நிவாரண மையங்களில் 337 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


பிற செய்திகள்

"குழந்தைகளுடன் தவிக்கிறோம்" - கடலூர் மக்கள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

37 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

11 views

மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

9 views

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

7 views

மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்து - 12 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

16 views

"வேளச்சேரி வீட்டில் இருந்து திருமாவளவன் இப்படி வெளியே வந்தது ஏன்?"விசிக விளக்கம்

வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்பதை மழை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.