காஷ்மீரில் ராணுவம் அதிரடி வேட்டை - லஷ்கர் 'டாப்' கமாண்டர் சுட்டுக் கொலை
பதிவு : அக்டோபர் 17, 2021, 04:39 PM
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் உள்பட 2 பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடியது.
காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவும், அவர்களை வேட்டையாடும் பணியை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது. உளவுத்துறை தகவலின்படி ஒவ்வொரு நகர்வையும் மேற்கொள்ளும் பாதுகாப்பு படைகள், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களில் அதிரடி நடவடிக்கையால் அவர்களை வேட்டையாடி வருகிறது.இந்நிலையில் புல்வாமா மாவட்டம் பாம்போர் பகுதியில் தரங்பாலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அவந்திபுரா போலீசாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருந்த 3 மாடி கட்டிடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இதனை அறிந்துக்கொண்ட பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து ராணுவம் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் உமர் முஸ்தாக் காண்டே என தெரியவந்துள்ளது. காஷ்மீர் போலீசாரால் தேடப்பட்ட டாப் 10 பயங்கரவாதிகளில் ஒருவரான உமர் காவல்துறையினர் கொலையில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதி என்றும் மற்றொரு பயங்கரவாதி பொதுமக்கள் கொலையில் தொடர்புடையவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து நடைபெற்ற 9 என்கவுண்டர்களில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரிவித்திருக்கும் காஷ்மீர் போலீஸ், தவறான வழிநடத்தலில் பயங்கரவாத பாதையை தேர்வு செய்த இளைஞர்கள், அதனை கைவிட வேண்டும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

374 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

86 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

52 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

31 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி

கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன..

16 views

பிற செய்திகள்

"ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்படவில்லை என்றும் புதிய உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

9 views

திவாலாகும் அனில் அம்பானியின் நிறுவனம்

திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

17 views

ஒமிக்ரான் வைரஸ் - மத்திய அரசு அறிவுறுத்தல் | Omicron virus

ஒமிக்ரான் வைரஸ் பரவலை அடுத்து, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது..

12 views

உலக அரங்கில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்... டுவிட்டரின் சி.இ.ஓ - வெற்றி பயணம்

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? விரிவாக பார்க்கலாம்

22 views

யானைகள் விபத்து...உறுதியளித்த ரயில்வே... Southern Railway

வரும் காலத்தில் யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க, மாநில வனத் துறைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

10 views

சஸ்பெண்ட் முடிவை நான் எடுக்கவில்லை - வெங்கையா நாயுடு

மாநிலங்களவை தலைவரான நான் சஸ்பெண்ட் முடிவை எடுக்கவில்லை - வெங்கையா நாயுடு

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.