கந்து வட்டி நபரிடம் சிக்க வைத்ததால் ஆத்திரம் - நண்பரை கல்லால் தாக்கி கொன்ற கொடூரம்
பதிவு : அக்டோபர் 16, 2021, 06:52 PM
திருவண்ணாமலை அருகே கந்துவட்டி நபரிடம் தன்னை சிக்க வைத்த நண்பரை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரியில் உள்ள எல்லையம்மன் கோயில் வளாகத்தில் இளைஞர் ஒருவர் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்ட போது தலையில் அடிபட்ட நிலையில் அந்த இளைஞர் இறந்து கிடந்தார். பின்னர் அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்த போது, கொசப்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் என தெரியவந்தது. பின்னர் இவரின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்த யுவராஜின் நண்பர்களாக டாக்டர் என்கிற தணிகைவேல், ஜீவா, இளங்கோவன் ஆகியோர் இருந்துள்ளனர். இதில் தணிகைவேல், ஆரணியை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் கந்துவட்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை தினேஷூக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பணத்தை கொடுத்த தினேஷ், தணிகைவேலின் முகவரியை கேட்டு அவரின் நண்பர்களான யுவராஜ், ஜீவா ஆகியோருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார்... இதனால் கோபமடைந்த அவர்கள் தணிகைவேலின் சென்னை முகவரியை தினேஷிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு சென்ற தினேஷ், கடன் பெற்ற தணிகைவேலை சந்தித்து தன்னுடைய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த தணிகைவேல், ஆரணிக்கு வந்து தன் நண்பர்களிடம் சண்டை போட்டுள்ளார். தன்னுடைய முகவரியை ஏன் சொன்னீர்கள்? என கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசில் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லவே, அவர்களும் சென்றனர். பின்னர் ஏரி அருகே மது அருந்திக் கொண்டிருந்த யுவராஜை நேரில் பார்த்த தணிகைவேல், மீண்டும் பிரச்சினை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் அங்கிருந்த கல்லை எடுத்து யுவராஜை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தப்பி ஓடிய தணிகைவேல், போலீசாரிடம் கடைசியில் சிக்கியதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1448 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

454 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

73 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

37 views

பிற செய்திகள்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

10 views

10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............

24 views

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

92 views

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

3 views

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

8 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.