மாணவரை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் - கைது செய்து சிறையில் அடைப்பு
பதிவு : அக்டோபர் 16, 2021, 05:05 PM
சிதம்பரத்தில் பள்ளி மாணவரை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்  உள்ள நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்றுவரும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்புக்கு செல்லாமல் வெளியே சுற்றியதாக கூறப்படுகிறது. வகுப்பிற்கு சரியாக வராத மாணவர்களை கண்டித்த இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன், சஞ்சை எனும் மாணவரை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவரை ஆசிரியர் கொடூரமாக எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்தது. இந்நிலையில், மாணவர் சஞ்சய் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நள்ளிரவில் போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுப்பிரமணியன் சிதம்பரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.

சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1444 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

451 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

71 views

பிற செய்திகள்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

3 views

10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............

21 views

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

83 views

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

3 views

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

7 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.