வணிக வளாகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை - சிசிடிவி மூலம் சிக்கிய கொள்ளையன்
பதிவு : அக்டோபர் 16, 2021, 12:59 AM
சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் 72 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையன் கைதானது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் 72 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையன் கைதானது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் ஆசிஷ் பன்சால் என்பவருடைய அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆம் தேதி அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் இருந்த 72 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, இரவு நேரத்தில் இரண்டு பைகளுடன் ஒருவர் நடந்து செல்வதும், வெளியே சென்று ஆட்டோவில் தப்பியதும் தெரியவந்தது.

கொள்ளையனை விரைந்து பிடிக்க கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் இறங்கியது காவல்துறை

கொள்ளையன் சென்ற வழித்தடத்தில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில், அவர் திருவல்லிக்கேணியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றது தெரியவர, அங்கு சென்று விசாரித்தனர் போலீசார்.

போலீஸ் செல்வதற்கு முன்பே அந்த நபர் விடுதியை காலி செய்ததால், அங்கு பதிவு செய்த போன் நம்பரை வைத்து TRACE செய்த போது அவர், தியாகராய நகரில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது.

பின்னர் சம்பந்தப்பட்ட ஒட்டலுக்கு சென்ற போலீசார், சூட் ரூமில் அறையெடுத்து தங்கியிருந்த நபரை மடக்கினர். 

விசாரணையில் அவர்  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாண்டுரங்கன் என்பதும், 1981 முதல் இதுவரை அவர் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு கோவையில் கொள்ளையடித்த வழக்கில் சிறை சென்றதாகவும், வெளியே வந்த பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். 

இருப்பினும் வாங்கிய கடன் கழுத்தை நெறுக்கியதால், சென்னைக்கு வந்து ஒரு மாதமாக வணிக வளாகங்களை நோட்டமிட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, பாண்டுரங்கனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவரிடம் இருந்து 61 லட்சம் ரூபாயை மீட்டனர். 
====

பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.. 72 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த பாண்டுரங்கன், தன் தோற்றம் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு ஹேர் கலரிங் மற்றும் பேஷியல் செய்து தன்னை பளபளப்பாக மாற்றி உள்ளார்...

அதேநேரம் கொள்ளை தொழிலை மட்டுமே நம்பிய அவர், சொகுசு ஓட்டலில் தங்கியதோடு, உயர் ரக மது, காஸ்ட்லியான சாப்பாடு என இருந்து வந்ததும் தெரியவந்தது...

பிரபல வணிக வளாகங்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், பணம் அதிகம் புழங்கும்  கார்ப்பரேட் அலுவலகத்தை குறிவைத்து கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. பாதுகாப்பு குறைபாடு உள்ள  தனியார் வணிக நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கொள்ளையடிப்பதையு​ம் பாண்டுரங்கன் வழக்கமாக வைத்துள்ளார். 

கொள்ளையடிப்பதற்கு முன்பாக சாதாரண லாட்ஜ்களில் தங்கும் பாண்டுரங்கன், கொள்ளையடித்த பின் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படியாக பல நாள் திருடன் கடைசியில் சிக்கியிருக்கிறார்... 

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

607 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

181 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

87 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

8 views

மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

4 views

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

7 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

53 views

என் சாவிற்கு காரணம் நீ தான் - தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மெசேஜ்

காதலித்து ஏமாற்றியதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் , காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

722 views

வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் - "அறிக்கைக்கு பின் இழப்பீடு குறித்த முடிவு"- செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், கால்வாயை தூர்வாரவும், கிளைக்கால்வாய்கள் உருவாக்கவும், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.