12 முதல் 18 வயது வரை கோவாக்சின் - மத்திய மருந்து ஆணையம் பரிந்துரை
பதிவு : அக்டோபர் 14, 2021, 11:24 AM
நாடு முழுதும் இரண்டு முதல் 18 வயதுடையவர்களுக்கு அவசரகால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...
கொரோனாவிற்கு எதிராக போரிட, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது....

18 வயது பூர்த்தி அடைந்தவர்களில் 96 கோடிக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது மத்திய அரசு

ஏற்கனவே 12 வயது மேற்பட்டோருக்கு ZYDUS தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலில், தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்காக இரண்டு முதல் 18 வயதுடையவர்களுக்கு பயன்படுத்தலாம் என மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் எதன் அடிப்படையில் பரிந்துரை வழங்கப்பட்டது என விரிவாக கூறப்படவில்லை..

தடுப்பூசி தொடர்பான முழு ஆய்வு முடிவுகள் பொது வெளியில் வெளியிடப்படவில்லை

இருப்பினும், 18 வயது மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தின் கோட்பாடுகளை வைத்து பல்வேறு கட்டங்களாக குழந்தைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டதாகவும்

அதில், 18 வயது மேற்பட்டோருக்கான செலுத்திய போது கிடைத்த முடிவுகளே கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அப்படி பார்த்தால் ஜூலை மாதத்தில் வெளியான இறுதி ஆய்வு முடிவுகளின்படி கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 77 புள்ளி 8 சதவீதம் என கூறப்பட்டுள்ளது

எனினும் கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கவில்லை. விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த சூழலில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

இதற்கான பட்டியலையும் சேகரித்து வருகிறது மத்திய அரசு.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

396 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

98 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

67 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

53 views

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

9 views

பிற செய்திகள்

"ரூ.176 கோடியை அரசு அளிக்கிறது"- கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் தகவல்

கேரள அறநிலையத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, 176 கோடி ரூபாயை அரசு அளிப்பதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2 views

"கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை " - சுற்றுலாத்துறை இயக்குநர் தகவல்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

7 views

கர்நாடக காங். தலைவர் மீது குற்றச்சாட்டு - காங்கிரஸ் ஊடக நிர்வாகி நீக்கம்

கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 views

குப்பைகளை அகற்றும் பணி தீவிரம் - ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்படுகிறது

சென்னையில் பெருங்குடி குப்பை கிடங்கை சமதளமாக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

60 views

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அஞ்சல் உறை - அஞ்சல் உறையை வெளியிட்ட தபால் துறை

புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு உள்ளது.

8 views

கொரோனா தடுப்பூசி : டாப் 11 மாநிலங்கள்

தடுப்பூசி செலுத்துவதில் முதல் 11 இடங்களில் உள்ள மாநிலங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.