கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்
பதிவு : அக்டோபர் 14, 2021, 09:27 AM
கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்காக பணத்தை கட்டியதாகவும், சுமார் 87 லட்சம் ரூபாய் பணத்தை அதில் இழந்து ஏமாந்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆன்லைனில் கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளங்கள் செயல்பட்டு வந்தது, விசாரணையில் தெரியவந்தது. 

இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்த பின்பு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனடிப்படையில் பணபரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது வங்கி கணக்குக்கு சொந்தமான நபர் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடியாக அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. தனது தந்தையின் மறைவிற்கு பிறகு ஆன்லைன் சூதாட்ட தொழிலையே பிரதானமாக கொண்டு அவர் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டு, மேட்ச் பெட்டிங்கிலும் அவர் புக்கியாக செயல்பட்டு 25 முதல் 30 நபர்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 

மேலும் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், சுமார் 25 லட்சம் ரூபாய் பணம், 6 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், லேப்டாப், சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

129 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

73 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

37 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

31 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

20 views

பிற செய்திகள்

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் - அரசாணை

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

13 views

TN Corona Update | தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

10 views

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் - ஓபிஎஸ், ஈ பி எஸ் கூட்டாக அறிவிப்பு

27 views

விவசாய குடும்பத்தின் மாதம் வருமானம் ரூ.10,218 - மக்களவையில் மத்திய அரசு தகவல்

இந்தியாவில் ஓரு விவசாய குடும்பத்தின் மாதம் வருமானம், 10,218 ரூபாய் என, மத்திய வேளாண் அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

10 views

(30/11/2021) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(30/11/2021) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

24 views

மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் - திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பேட்டி

மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும், நாளை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தி.மு.க. மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா கூறி உள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.