பூக்கள் விலையேற்றம்... பொதுமக்கள் அதிர்ச்சி - திடீர் விலையேற்றத்துக்கு காரணம் என்ன?
பதிவு : அக்டோபர் 14, 2021, 02:26 AM
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில், இன்று மூன்று மடங்கு வரை அதிக விலையில் பூக்கள் விற்பனையாகின. இதற்கான காரணம் என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில், இன்று மூன்று மடங்கு வரை அதிக விலையில் பூக்கள் விற்பனையாகின. இதற்கான காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில், பண்டிகைக் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து பூக்களை வாங்கிச் செல்வது வழக்கம். 

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், இன்று தோவாளை சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்காக, ஓசூர், ராயக்கோட்டை, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.  

ஆனால், பூக்களின் விலை வழக்கத்தை விட மூன்று மடங்கு வரை அதிகமாக இருந்ததால், பூ வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறுகையில்...

கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட செவ்வந்திப்பூ 200 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாடாமல்லி 200 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை 800 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ 1200 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதேபோல், 100 ரூபாய்க்கு விற்ற ரோஜா 250 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி 400 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்ற அரளிப்பூ 500 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் 600 ரூபாய்க்கும் இன்று விற்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக சரிந்ததும், விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் 
பூ வியாபாரிகள்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, நவராத்திரி என பண்டிகை நாட்கள் வரிசைகட்டும் நிலையில், இந்த விலையேற்றம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.    
------------

பூக்கள் விலை
3 மடங்கு உயர்வு (Up arrow) 
------------

முன்பு(கிலோ)  தற்போது(கிலோ)
(May give like tabular column)
செவ்வந்திப்பூ - ரூ.100 ரூ.200
வாடாமல்லி    -  ரூ.50       ரூ.200
மல்லிகை  - ரூ.400     ரூ.800
பிச்சிப்பூ           - ரூ.600     ரூ.1200
 ------------
ரோஜா     -  ரூ.100  ரூ.250 (Same tabular column)
சம்பங்கி           -ரூ.100   ரூ.400
அரளிப்பூ         -  ரூ.100   ரூ.500
கனகாம்பரம்    -   ரூ.200   ரூ.600

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

483 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

116 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

86 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

44 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

33 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

28 views

பிற செய்திகள்

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

ஓசூர் அருகே ஒற்றை யானை புகுந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

2 views

"ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்" - ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

காற்றின் தரத்தை கண்காணிக்கும் வகையில் 17 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

5 views

25 வயது இளைஞரை தீர்த்துக்கட்டிய மைத்துனர் - மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம்

நெல்லை மாவட்டம் அணைக்கரை அருகே இளைஞர் ஒருவரை, அவரது அக்காள் கணவரே சித்திரவதை செய்து துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 views

கராத்தே மாஸ்டர், தாளாளரின் பாலியல் தொந்தரவு - கையை அறுத்துக்கொண்ட பள்ளி மாணவி

சேலம் மாவட்டத்தில் பள்ளியின் கராத்தே மாஸ்டர், தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த‌தால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 views

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமம் - பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட சபாநாயகர்

கடல் அரிப்பு பாதிப்புகளை பார்வையிடச் சென்ற சபாநாயகரிடம், மீனவ கிராம மக்கள், தூண்டில் வளைவு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

ஐஐடிவிழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; "தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படாதது விதிமீறல்" - ஐஐடி இயக்குனருக்கு அமைச்சர் கடிதம்

சென்னை ஐஐடியில் இனி வரும் காலங்களில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று, ஐஐடி இயக்குனருக்கு ,உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.